கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், மூன்றாவது டிவிஷன் போட்டி சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. நேற்று முன் தினம் ரெயின்போ கே.பி.எம்., கிரிக்கெட் கிளப் அணியும், கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. ரெயின்போ அணியினர், 32.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 115 ரன் எடுத்தனர். வீரர் அருண் பாண்டியன், 39 ரன் எடுத்தார். எதிரணி வீரர்கள் நரசிம்மன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர், தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். கோவை லெஜண்ட்ஸ் அணியினர், 23.2 ஓவரில் இரு விக்கெட் இழப்புக்கு, 119 ரன் எடுத்தனர். வீரர்கள் நரசிம்மன், 43 ரன்னும், சிபி சுதர்சன், 38 ரன்னும் எடுத்தனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.