மேலும் செய்திகள்
அகோர வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
30-May-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது.கிணத்துக்கடவு அடுத்துள்ள, குளத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், 2ம் தேதி, பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, நேற்று, அம்மனுக்கு ஆபரண பெட்டி எடுத்து வரும் நிகழ்வு, காப்பு கட்டுதல், சக்தி கும்பம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.இன்று, 4ம் தேதி, அதிகாலை 3:30 மணிக்கு மாவிளக்கு வழிபாடும், 4:00 மணிக்கு, மாகாளியம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு, சக்தி கும்பம் எடுக்கப்படுகிறது. 5ம் தேதி, காலை 10:30 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.வரும், 6ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மாகாளியம்மன் மற்றும் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடக்கிறது.
30-May-2025