உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருப்பரங்குன்றம் முருகன் மலை விவகாரம்: மும்மத குழு அமைத்து தீர்வு காண வேண்டும்

திருப்பரங்குன்றம் முருகன் மலை விவகாரம்: மும்மத குழு அமைத்து தீர்வு காண வேண்டும்

கோவை:விஸ்வகர்மா ஜகத்குரு ஸ்ரீ லா ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கூறியதாவது:முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். 500 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த ஒரு இஸ்லாமியரின் சமாதியை வைத்துக் கொண்டு, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என கூறுவது முட்டாள்தனமானது.தமிழக இந்துக்கள் இம்மோசமான சம்பவத்தால் வேதனையடைந்துள்ளனர். ஒரு சிலரின் சதியால், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் பிரச்னை ஏற்பட்டு, தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. 1994ம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.ஆனால், தர்கா வழிபாட்டை காரணம் காட்டி, முருக பக்தர்கள் கார்த்திகை தீபம் ஏற்ற முடியாமல் வேதனையடைந்துள்ளனர். தமிழக அரசு, தமிழக காவல்துறை இந்துக்களை ஒருதலை பட்சமாக நடத்தாமல், உரிய உரிமையை தரவேண்டும்.திருப்பரங்குன்றம் முருகன் மலை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க வேண்டும். தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துபவர்களை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் இருக்க, மூன்று மதங்களைச் சேர்ந்த தமிழகத்தின் தலைசிறந்த பொது தலைவர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்தி, திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rajasekar Jayaraman
பிப் 04, 2025 22:20

யார்ரா இவன் விளம்பரமாவதற்கு மும் மதத்தை இழுக்கிறான் உன் வீட்டு பிரச்னைக்கு பக்கத்து வீட்டுக்காரன் இருவரையும் அழைத்து பேசுவாயா.


Kundalakesi
பிப் 04, 2025 07:15

1000 ஆண்டு பழமை என்ன வென்று மக்களுக்கு தெரியும். உருவ வழிபாடு வேண்டாம் என்று எதற்கு சமாதியை மலை மீது நிறுவ வேண்டும்


Krishna Moorthy
பிப் 04, 2025 06:32

குழு தேவையில்லை. அரசு தான் ஓட்டுக்காக இதில் குறட்டையை குழப்பாமல் இந்துக்களுக்கும், முருகனுக்கு மட்டுமே உரிமையென திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். இனிமேலாவது இந்துக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். கடவுளை வணங்கினால் மட்டும் போதாது. ஊடுருவலை தடுக்க ஒற்றுமையாக இருந்து போராடவேண்டும்