உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மராத்தான் போட்டியில் திருப்பத்துார் வீரர் வெற்றி

மராத்தான் போட்டியில் திருப்பத்துார் வீரர் வெற்றி

வால்பாறை; வால்பாறையில் நேற்று நடந்த மராத்தான் போட்டியில் மாநில அளவில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.இயற்கையோடு இணைந்துள்ள வால்பாறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வால்பாறை வாகன பழுதுநீக்குவோர் நல சங்கத்தின் சார்பில், 'ஹில்ஸ் மராத்தான்' ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது. வால்பாறை நகர் ஸ்டேன்மோர் சந்திப்பில் துவங்கிய மராத்தான் போட்டியில், மாணிக்கா எஸ்டேட் மாதா கோவில் சந்திப்பு வரை சென்றனர். போட்டியில் கோவை, பொள்ளாச்சி, சென்னை, திருப்பூர், வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த, 150 வீரர்கள் கலந்து கொண்டனர்.திருப்பத்துாரை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் சந்தோஷ் முதல் பரிசையும், சேலத்தை சேர்ந்த பாலசந்திரன் இரண்டாம் பரிசையும், வால்பாறையை சேர்ந்த தமிழழகன் மூன்றாவது பரிசையும் வென்றனர். இது தவிர, 7 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை வாகன பழுதுநீக்குவோர் நல சங்க தலைவர் பிரபு, செயலாளர் குட்டி, பொருளாளர் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ