திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
கோவை; கோவை சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வி.ஜி.பி., உலக தமிழ்ச்சங்கத்தின், 176வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. சங்க தலைவர் சந்தோசம் தலைமைவகித்து உருவச்சிலையை திறந்துவைத்தார்.உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். தனிமனித ஒழுக்கநெறியை மாணவர்கள் மத்தியில் வளர்க்கும் வகையில், மாணவர்கள் திருக்குறள் படிக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.நிகழ்வில், பள்ளி தாளாளர் சந்தானகோபால், அறங்காவலர் சுதர்சன், பள்ளி முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் யோகிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.