உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இதுவும் சாத்தியமே! வீட்டில் இருந்தபடி பத்திரப்பதிவு; அறிமுகமாகிறது ஸ்டார் 3.0 திட்டம்

இதுவும் சாத்தியமே! வீட்டில் இருந்தபடி பத்திரப்பதிவு; அறிமுகமாகிறது ஸ்டார் 3.0 திட்டம்

கோவை: புதிதாக வீடு, வீட்டு மனை, நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் வாங்குவோர், இருக்கும் இடத்தில் இருந்தவாறே, பத்திரங்களை 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்யும் வசதியை செயல்படுத்த, பத்திரப்பதிவு துறை ஆலோசித்து வருகிறது. 'ஸ்டார் 3.0' என இந்த திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. துரிதமான சேவைகளை உயர்ந்த தரத்துடன் வழங்குவது திட்டத்தின் நோக்கம். மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த, 323.45 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த, நான்கு மாவட்டங்களுக்கு ஒரு குழு வீதம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில், 'பைலட்' திட்டமாக செயல்படுத்த, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை, ஆன்லைனில் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். பதிவாளருக்கு சிறு சந்தேகம் கூட ஏற்படாத வகையில், ஆவணங்களை சரியாக இணைப்பது அவசியம். ஒரு வெப்கேமரா, ஒரு ஸ்கேனிங் மற்றும் பிரிண்டர் இயந்திரம், அதிக திறன் கொண்ட இணைய வசதி இருந்தால் போதும். நில வழிகாட்டு மதிப்பீடு அடிப்படையில், விலை நிர்ணயித்து, பத்திரப்பதிவுத்துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி, அதற்கான ரசீதுகளை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். கோவை மண்டல பத்திரப்பதிவுத்துறை துணை தலைவர் பிரபாகரன் கூறுகையில், ''ஸ்டார் 3.0 திட்டம், தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது; கோவையில் விரைவில் நடைமுறைக்கு வரும். மனிதன் நினைத்தால் எதுவும் சாத்தியமே. தொழில்நுட்ப ரீதியாக தெரிந்தவர்கள், எளிதாக அரை மணி நேரத்தில் ஆவணங்களை பதிவு செய்யலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Laurence Caldwell
செப் 15, 2025 07:15

3.0 மட்டும் அல்ல 300.0 வந்தால் கூட வீட்டில் இருந்தே பத்திரப் பதிவு என்பது சாத்தியம் அல்ல. வீட்டில் இருந்து பதிந்து கொள்ளலாம். அப்படி வீட்டில் இருந்து பதிந்தாலும் எப்படியும் சார்பதிவாளரை நேரில் அனுகி நன்கொடை வழங்காத பட்சத்தில் எந்த பத்திரமாக இருந்தாலும் அது சரியில்லை இது சரியில்லை என்று திருப்பி அனுப்பப்படும். 3.0 கொண்டு வருவது முக்கியம் அல்ல அதில் பதியப்படும் பத்திரங்கள் எந்தெந்த காரணங்களுக்காக திருப்பலாம். சரியான ஆவணங்களை திருப்பினால் அந்த ஆவணங்களை எப்படி பதிவு செய்வது என்ற விபரங்களையும் கொடுத்தால் இன்னும் நலமாக இருக்கும். எப்படியும் 100-க்கு 80 பத்திரம் திருப்பி அனுப்பப்படும்.


saravan
செப் 09, 2025 18:22

ஆவணம் சரியில்லை என்று திருப்பி அனுப்புவர், அந்த இடத்தில கையூட்டு இடம் பெற வாய்ப்பு உள்ளது


spr
செப் 09, 2025 18:14

நேரில் சென்று பதிவு செய்யும் போதே பல குளறுபடிகள் ஏமாற்று வேலைகள் இனி உரிமையாளருக்குக்குத் தெரியாமலேயே அவரது சொத்துக்கள் கைமாறும் வாய்ப்பு அதிகம் நாட்டில் கணினி மயமாக்க வேண்டிய பணிகள் பல இருக்கையில் இது முதன்மை பெறுவதே கேள்விக்குறியாகிறது இறுதிக் கையெழுத்தாவது உரிமையாளர் நேரில் வந்து போட வேண்டுமா? இல்லை அதுவும் வீட்டில் இருந்தேவா


c.mohanraj raj
செப் 09, 2025 06:47

லஞ்சம் எவ்வளவு அதையும் கூறிவிட்டால் நன்றாக இருக்கும்


Sridharan P
செப் 09, 2025 11:06

அதையும் ஆன்லைன் முறையில் செலுத்தும் வசதி செய்யப்படும்


உண்மை கசக்கும்
செப் 09, 2025 06:41

அப்படீன்னா கையூட்டு அதாங்க லஞ்சம் கொடுக்க வேண்டாமா. ஒரு சந்தேகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை