மேலும் செய்திகள்
அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
04-Mar-2025
கோவை; மது பாரில் தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்த டாஸ்மாக் ஊழியரை தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, பெரிய கடை வீதி, எஸ்.ஆர்.ஜே., நகரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு ஊழியராக புதுக்கோட்டையை சேர்ந்த சுந்தரராஜன், 65 பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, பாரில் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கராஜ் என்பவர், மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது வி.எச்.காலனியை சேர்ந்த மணிகண்டன், 29, சேலம் மாசி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல், 30 ஆகியோர் ரங்கராஜன் மொபைல்போனை எடுத்து, அவரிடம் தகராறு செய்தனர்.பார் ஊழியர் சுந்தரராஜன், பெரியகடை வீதி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வந்து மணிகண்டன், கதிர்வேலை எச்சரித்து சென்றனர்.இந்நிலையில், மீண்டும் அங்கு வந்த இருவரும், போலீசாருக்கு தகவல் தெரிவித்த சுந்தரராஜனை தாக்கினர். படுகாயமடைந்த சுந்தர்ராஜன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த பெரியகடைவீதி போலீசார், மணிகண்டன், கதிர்வேல் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.
04-Mar-2025