| ADDED : அக் 16, 2025 06:43 AM
கோவை: மதுரை மேலுாரை சேர்ந்தவர், அய்யனார். இவரது சகோதரர் பாலா என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை கோவை மத்திய சிறைக்கு வந்த அய்யனார், தன்னை சிறைக்குள் அனுமதிக்குமாறு, பாதுகாப்புக்கு நின்றிருந்த சிறை போலீசாரிடம் கேட்டார். போலீசார் மறுத்தனர். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அய்யனார், தனது சகோதரரை சிறைக்குள் சிலர் சித்ரவதை செய்வதாகவும், அவரை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்து போலீசாரை மிரட்டினார். பணியில் இருந்த போலீசார், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவித்தனர். மறுநாள் தான் வருவதாகவும், அப்போது தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்து சென்றார். இதுகுறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் அய்யனாரை சிறையில் அடைத்தனர்.