உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதி இன்றி மண் எடுத்த மூவர் கைது; மூவருக்கு வலை

அனுமதி இன்றி மண் எடுத்த மூவர் கைது; மூவருக்கு வலை

நெகமம்; நெகமம் பகுதியில், சட்ட விரோதமாக மண் எடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.நெகமம் அருகே, ஆலமரத்து மேடு பகுதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான இடத்தில், சட்ட விரோதமாக மண் எடுப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, கப்பளாங்கரை வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.மண் எடுப்பதை உறுதி செய்து, நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கிருந்த லாரி டிரைவர்கள் கனகராஜ், 38, ராம், 38, மற்றும் பொக்லைன் டிரைவர் வினோத், 24, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும், நிலத்தின் உரிமையாளர் சுப்ரமணியம், பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் ஜக்கார்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் பனப்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகிய மூவரையும் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை