உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேவல் காலில் கத்தி கட்டி சூதாடிய மூவர் கைது

சேவல் காலில் கத்தி கட்டி சூதாடிய மூவர் கைது

கோவை; கோவை அருகேயுள்ள தடாகம் ரோடு, இடையர்பாளையம் பகுதியில் காலியிடத்தில் சேவல் சூதாட்டம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கவுண்டம்பாளையம் போலீசார், விரைந்து சென்று பார்த்தபோது, சேவல் காலில் கத்தியை கட்டி, சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, தடாகம் ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன்,27, தினகரன்,24, கிருஷ்ணமூர்த்தி,46, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று சேவல்கள், 5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி