மேலும் செய்திகள்
வாகன விபத்தில் சிறுவன் காயம்
18-Dec-2024
கிணத்துக்கடவு: கோவை மாவட்டம், சிங்கையன்புதுரை சேர்ந்தவர்கள் வீரமணி,- 33, பிரபு,- 33, கருப்புசாமி, 29. மூவரும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலை, ஏழூர் பிரிவு பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் டீ குடித்தனர். பின், வீட்டிற்கு செல்ல, வீரமணி, 'யமஹா எப் இசட்' பைக்கை ஓட்ட, பிரபு, கருப்புசாமி பின்னால் அமர்ந்து சென்றனர். இதில், சொக்கனுார் ரோட்டில் காதருத்தாமேடு வளைவு பகுதியில் ரோட்டோரம் இருந்த பனை மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மூவரையும், அவ்வழியாக வந்த சிலர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மூவரையும் பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
18-Dec-2024