மேலும் செய்திகள்
இடியுடன் கூடிய கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
14-Sep-2026
வால்பாறை: வால்பாறையில் இடியுடன் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வால்பாறையில் கடந்த சில நாட்களாக, சாரல்மழை மட்டுமே பெய்த நிலையில், நேற்று காலை இடியுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசியதால், பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இடி, மின்னலுடன் மழை பெய்ததால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும், மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். சோலையாறு அணையின் 160 அடி உயரத்தில், நேற்று காலை, 73.84 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 422 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 507 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்): சோலையாறு – 22, ஆழியாறு – 20, வால்பாறை – 19, மேல்நீராறு – 13, கீழ்நீராறு – 35, காடம்பாறை – 12, வேட்டைக்காரன்புதுார் – 37, துாணக்கடவு – 14, பெருவாரிப்பள்ளம் – 14, நவமலை – 5, பொள்ளாச்சி – 11 என்ற அளவில் மழை பெய்தது.
14-Sep-2026