உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றிய தலைவர் பதவிக்கு பா.ஜ.,வில் கடும் போட்டி

ஒன்றிய தலைவர் பதவிக்கு பா.ஜ.,வில் கடும் போட்டி

அன்னுார்; அன்னுார் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற, பா.ஜ.,வில், கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. 25 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட கிளைகளில், கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. அன்னுார் வடக்கு ஒன்றியத்தில், 55 கிளைகள் உள்ளன. இங்கு இதுவரை 3,500 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தலா 50 பேரை உறுப்பினராக சேர்த்து, 48 பேர் தீவிர உறுப்பினர் ஆகியுள்ளனர். 50 சதவீதம் கிளைகளில் கிளை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பே ஒன்றிய தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும். வடக்கு ஒன்றியத்தில் இதுவரை 30 கிளைகளில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். தொடர்ந்து கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஒன்றிய தலைவர் பதவியை பிடிக்க, தற்போதைய நிர்வாகிகள் ஈஸ்வரன், ரவிக்குமார், திருமூர்த்தி, அசோக், ராஜராஜசாமி, நடராஜ், கோபால்சாமி என எட்டு பேர் முயற்சி செய்து வருகின்றனர். தீவிர உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதே போல் அன்னுார் தெற்கு ஒன்றியத்தில் உள்ள 62 கிளைகளில் 33 கிளைகளுக்கு கிளை நிர்வாகி தேர்தல் முடிவடைந்துவிட்டது. 4,010 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தெற்கு ஒன்றியத்தில் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை