உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டி.என்.பி.எஸ்.சி., தேர்வு; 3075 பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு; 3075 பேர் பங்கேற்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வை, 3,075 பேர் எழுதிய நிலையில், 1,142 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூத்த உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான, டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 'குரூப் 2, குரூப் 2ஏ' தேர்வுகள் நேற்று நடத்தப்பட்டன. அதன்படி, பொள்ளாாச்சியில், 15 மையங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இதற்காக, மொத்தம், 4,217 பேர், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதன்படி, அந்தந்த மையங்களில், நேற்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது. தேர்வர்கள், காலை, 8:30 மணிக்கே அந்தந்த மையங்களுக்கு சென்றனர். அதன்படி, 12:30 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வை, 3,075 பேர் தேர்வு எழுதினர். 1,142 பேர் தேர்வு எழுதவில்லை. வருவாய் அதிகாரிகள் கூறுகையில், 'டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக, பள்ளி, கல்லுாரி என, 15 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உரிய நேரத்துக்குள் வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக தேர்வு எழுத வந்த தேர்வர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல, முறைகேடுகளைக் கண்டறிந்து தடுக்க, கண்காணிப்பு அலுவலர்கள், வீடியோகிராபர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !