உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உடலும், மனமும் ஆரோக்கியம் பெற அன்றாடம் திருப்பாவை படிக்கணும்

உடலும், மனமும் ஆரோக்கியம் பெற அன்றாடம் திருப்பாவை படிக்கணும்

கோவை; 'திருப்பாவை திருவிழா 2025' இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.அனைத்துலகும் வாழப்பிறந்த எம்பெருமானார் தரிசன சபை, வாய்ஸ் ஆப் கோவை மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து வழங்கிய இந்நிகழ்ச்சியை, நேற்று இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணைய்யன் மற்றும் கீதா சுதர்சன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.எம்பெருமானார் தரிசன சபையினரின் கோபூஜை நடந்தது. ஸ்ரீநிவாசன், புண்டரீகாட்சி ஸ்ரீநிவாசன் ஆகியோரது, தயிர்கடையும் வைபவம் நடந்தது. பரதநாட்டிய பள்ளி மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் ஸ்ரீபத்ரிநாராயண பட்டர் பேசியதாவது:குழந்தை பிராயத்திலேயே, திருப்பாவையை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். திருப்பாவையில் அறிவியல், கணிதம், விஞ்ஞானம், தத்துவம், பொருளாதாரம், வானசாஸ்திரம் என்று, உலக வாழ்வியல் அனைத்தும் பொதிந்துள்ளது. அன்றாடம் திருப்பாவையை சேவிக்க வேண்டும். அப்போது உடல் ஆரோக்கியத்தோடு, மனமும் முழுமையான ஆரோக்கியத்தை பெறும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.எம்பெருமானார் தரிசன சபை நிர்வாக அறங்காவலர் மாதவ ராமானுஜதாசன் பேசுகையில், '' ஆண்டாள் வேண்டுகோள்களை நிறைவேற்றியவர் ராமானுஜர். திருப்பாவை தெரியாதவர்கள் பூமிக்கு பாரம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொருவரையும் பூமிக்கு பாரமில்லாதவர்களாக மாற்றுவதற்காகவே, இது போன்ற நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்,'' என்றார்.திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் தலைமையில், 15 பட்டர்கள் முன்னிலையில், ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.பாலக்கால் நடுதல், நிச்சயதார்த்தம், மாலை மாற்றுதல், பிடிசுற்றுதல், மாமனார் சீர்வரிசை சமர்ப்பித்தல், திருமாங்கல்யதாரணம், வாரணமாயிரம் பாடி நிறைவு செய்தல், தேங்காய் உருட்டி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட, ஏராளமான பாரம்பரிய சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி