உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை விற்றவர்கள் கைது

புகையிலை விற்றவர்கள் கைது

நெகமம் : நெகமம் சுற்று வட்டார பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, நெகமம் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.இதில், நெகமம் தளி ரோட்டில் நவநீதகிருஷ்ணன், 50, என்பவர் மளிகை கடையில் இருந்து 39 புகையிலை பொருள் பாக்கெட்டுகள் மற்றும் ஆவலப்பம்பட்டியில் கிருஷ்ணசாமி, 76, என்பவர் கடையில் இருந்து, 15 புகையிலை பொருள் பாக்கெட்டுகள், என மொத்தம் 54 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை