இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம் நாம சங்கீர்த்தன வைபவம் வி.ஆர்.ஜி., மஹால், இடையர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, தடாகம் ரோடு. கணபதி ஹோமம், மஹன்யாச ஜபம், ருத்ர ஆவாஹனம், ருத்ர ஜபம், ஏகாதச திரவிய ருத்ராபிஷேகம், கோ பூஜை, ருத்ர ஹோமம், வஸோர்தரை, தம்பதி பூஜை, கலசாபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் n காலை, 5:00 முதல் மதியம், 12:30 மணி வரை நடக்கிறது. நாராயணீயம், நாமசங்கீர்த்தனம் மதியம், 2:45 மணி முதல் இரவு, 9:15 மணி வரை நடக்கிறது. ஏற்பாடு: ஆஸ்திக சமாஜம். சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர் n காலை, 9:30 மணி முதல். பங்கேற்பு: ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள். கம்பராமாயணம் சொற்பொழிவு ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. பங்கேற்பு: பூஜ்யஸ்ரீ சுவாமி மோக்ஷ வித்யானந்தா. ஆன்மிக அறிவுப் பயணம் சாதனாலயா, கோத்தாரி லேஅவுட், நார்தர்ன் லைட் ஸ்பெக்ட்ரம் பள்ளி பின்புறம், திருச்சி ரோடு n காலை, 7:00 மணி மற்றும் மாலை, 5:30 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி புத்தாக்க பயிற்சி நேரு மேலாண்மைக் கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.