மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
'பகவத்கீதை' சொற்பொழிவு
'எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்' என்ற பகவத்கீதை பொன்மொழி, நம்பிக்கையே உலகின் மிகப்பெரிய சக்தி என போதிக்கிறது. டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில், 'பகவத்கீதை' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தியன் கல்லுாரி முன்னாள் மாணவர்கள், குடும்பத்தினருடன் சந்தித்து, மகிழ்கின்றனர். அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், மாலை, 5:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. பட்டமளிப்பு விழா
சின்னவேடம்பட்டி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில், படடமளிப்பு விழா நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் சிறப்பு விருந்தினர்கள் பல்வேறு துறை மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி கவுரவிக்கின்றனர். ஆண்டு விழா
கணபதி, சி.எம்.எஸ்., வித்யா மந்திர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில், 27வது ஆண்டு விழா மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. இதேபோல், அன்னுார், நவ பாரத் நேசனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 18வது ஆண்டு விழா மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. தொழில் வழிகாட்டல்
கருமத்தம்பட்டி, ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'பாதுகாப்பான டிஜிட்டல் சகாப்தத்தில் செழிக்க இளம் மனங்களை மேம்படுத்தல்' என்ற தலைப்பில், பயிலரங்கு நடக்கிறது. கருமத்தம்பட்டி, ஹோலி ரோசரி மெட்ரிக் பள்ளியில், காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை பயிற்சி நடக்கிறது. மீண்டும் பள்ளிக்கு போகலாம்
கிக்கானி வித்யா மந்திர் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. கடந்த 1974ம் ஆண்டு படித்த முன்னாளர் மாணவர்கள் சந்திக்கின்றனர். ஆர்.எஸ்., புரம், கிக்கானி உயர்நிலைப்பள்ளியில், காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. பாட்மிண்டன் போட்டி
லுானார் மன மகிழ் மன்றத்தாரின் கோவை மாவட்ட பாட்மிண்டன் வீரர்கள் இடையிலான மாவட்ட அளவிலான ஐவர் பூப்பாந்தாட்டப் போட்டிகள் நடக்கிறது. நேரு விளையாட்டு அரங்கம் அருகில், காலை, 7:00 மணி முதல் போட்டிகள் நடக்கிறது. சித்திரம் பேசுதடி
கோவை விழாவின் ஒருபகுதியாக, 'சித்திரம் பேசுதடி' என்ற தலைப்பில், ஓவியம் மற்றும் கைவினை கலைப்பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், ஸ்கீம் ரோடு, ஆர்ட் வீதியில், காலை, 1:30 முதல் இரவு, 7:30 மணி வரை நடக்கிறது.பொதுமக்கள் கண்காட்சியை கண்டு ரசிக்கலாம். உணவுத் திருவிழா
கோவையில் முதல் முறையாக, மிகப்பெரும் உணவு திருவிழா கொடிசியாவில் இன்று மாலை, 5:00 மணி முதல் துவங்குகிறது. ஒரே தட்டில் 500க்கும் மேற்பட்ட உணவுகள் சாதனை மற்றும் பிரமாண்டமான 100 கிலோ கேக் ஆகியவை நிகழ்வில் இடம்பெறுகிறது. திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'செயல் திட்டத்துக்கான நெறிமுறையும், வழிமுறையும்' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம். குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.