உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

கும்பாபிஷேக விழா

ஈச்சனாரி பாடசாலை வீதியில் அமைந்துள்ள, ஈச்சனாரி குழந்தை வேலப்பர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மேல், மூன்றாம் கால வேள்வி, இரவு, 8:30 மணிக்கு மேல், கோபுரகலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.

'பகவத்கீதை' சொற்பொழிவு

'எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்' என்ற பகவத்கீதை பொன்மொழி, நம்பிக்கையே உலகின் மிகப்பெரிய சக்தி என போதிக்கிறது. டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், 'பகவத்கீதை' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.

சித்தர்கள் கருத்தரங்கம்

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில், சித்தர்கள் கருத்தரங்கம், பேரூர் பட்டீசுவரர் கோவில் அருகில், குரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை, 7:00 மணி முதல், சித்தர்கள் ஞான உலா மற்றும் மகாயாகம், மின்நுால் கண்காட்சி, 'சித்தர்நெறி எனும் சிவ நெறி' மற்றும் குலதெய்வ வழபாடு எனும் தலைப்புகளில், கருத்தரங்கு நடக்கிறது.

பட்டமளிப்பு விழா

நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 22வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில், நாசாவின் வானியல் இயற்பியலாளர் விஞ்ஞானி நாச்சிமுத்து கோபாலசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.

விருது வழங்கும் விழா

உலக தமிழ் பண்பாட்டு மையம் சார்பில், 11ம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. 'உடலியல் செயல்முறைக் கையேடு' என்ற தலைப்பில் மருத்துவக் கையேடு நுாலும் இதில் வெளியிடப்படுகிறது. காளப்பட்டி ரோடு, டாக்டர் என்.ஜி.பி., கலையரங்கில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

ஆற்றல் சேமிப்பு

கற்பகம் பொறியியல் கல்லுாரி சார்பில், 'ஆற்றல் பாதுகாப்பு' என்ற தலைப்பில் தொழில்நுட்ப சிறப்புரை நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 9:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் மேலாளர் செல்வக்குமார் உரையாற்றுகிறார்.

நர்சிங் மாணவர்களுக்கு பட்டமளிப்பு

வட்டமலைபாளையம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, கங்கா நர்சிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு துவங்கும் விழாவில், கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி கலந்து கொள்கிறார்.

கார்த்திகை தீப விழா

சின்னவேடம்பட்டி ஏரியில், கார்த்திகை தீபம் ஏற்றிடும் நிகழ்வு நடக்கிறது. சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர்க்கரங்கள் சார்பில், சின்னவேடம்பட்டி ஏரி - அவுட்லேட்டில், மாலை, 4:30 மணிக்கு தீபம் ஏறறப்படுகிறது.

திறன்மேம்பாட்டு பயிற்சி

அரசூர், கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி சார்பில், 'பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி' நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

துவக்க விழா

மதுக்கரை மார்க்கெட் ரோடு, நைட்டிங்கேல் நர்சிங் கல்வி நிறுவனத்தில், நைட்டிங்கேல் முதியோர் இல்லம் துவக்க விழா நடக்கிறது. நர்சிங் மாணவர்களுக்கு விளக்கேற்றும் விழா மற்றும் பிசியோதெரபி மாணவர்களுக்கு கோட் அணிவிக்கும் நிகழச்சியும், காலை 10:30 மணி முதல் நடக்கிறது.

திருக்குறள் பயிலரங்கு

திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'நிர்வாகத் திறனுக்கான நெறிமுறையும், வழிமுறையும்' என்ற தலைப்பில், பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்ல பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை