மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
28-Dec-2024
மலுமிச்சம்பட்டி, அம்பாள் நகர், ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் ஆன்மிக கருத்தரங்கு நடக்கிறது. 'புருஷார்த்த நிச்சயம்' என்ற தலைப்பில், காலை, 9:00 மணி முதல் கருத்தரங்கம் நடக்கிறது. முப்பெரும் விழா
கணபதி, அசிசி நகர், அத்திப்பாளையம் பிரிவு, புனித பிரான்சிஸ் அசிசியார் ஆயலத்தில், ஆலய அபிஷேக விழா நடக்கிறது. புது நன்மை உறுதிப்பூசுதல் விழா மற்றும் பங்கு திருவிழா ஆகியவை காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. விருது வழங்கும் விழா
தனியார் மெட்ரிக் பள்ளிகளின் குழுமம் சார்பில் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு விழா துவங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொள்கிறார். புதுமை திறன் போட்டிகள்
பீளமேடு, நேஷனல் மாடல் பள்ளி சார்பில், 'பிங் பேங்க்' என்ற தலைப்பில், மிகப்பெரும் புதுமை திறன் போட்டிகள், காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. நடப்பு உலக பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியில், 1975ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பள்ளி வளாகத்தில், மாலை, 4:00 மணிக்கு சந்திக்கும் முன்னாள் மாணவர்கள் ஒன்றாக பேசி, பழைய நினைவுகளை பகிரவுள்ளனர். குழு புகைப்படம் எடுத்தும் மகிழவுள்ளனர். பொங்கல் விழா
நவக்கரை தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா காலை, 8:30 மணிக்கு நடக்கிறது. மாணவர்கள் இணைந்து கோலாகலமாய் விழாவை கொண்டாடவுள்ளனர். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பட்டமளிப்பு விழா
யுனைடெட் பார்மசி கல்லுாரியில், முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடக்கிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் துணைவேந்தர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார். தேசிய வாக்காளர் தினம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் தேசிய வாக்களர் தினம் காலை, 11:30 மணிக்கு கொண்டாடப்படுகிறது. இதில் சமூக ஆர்வலர் நந்தகுமார் கலந்துகொண்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார். அறிவு உச்சி மாநாடு
ஜூபிளன்ட் தமிழ்நாடு சார்பில், குளபோல் எக்ஸ்போ மற்றம் அறிவு உச்சி மாநாடு நடக்கிறது. அவிநாசி ரோடு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில் வல்லுனர்கள் உரையாற்றுகின்றனர். கட்டுமான கண்காட்சி
ஆர்க்கிடெக்ட்டுகள், என்ஜினியர்கள், பில்டர்கள் சார்பில், 'பில்ட்மேட் 2025' எனும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடத்தப்படுகிறது. நீலாம்பூர், பி.எஸ்.ஜி., ஹைடெக் ஆடிட்டோரியத்தில் நடக்கும் கண்காட்சியை, காலை, 10:00 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். நுால் வெளியீட்டு விழா
எழுத்தாளர் கோவை மணிமோகனின், நுால்கள் வெளியீட்டு விழா அவிநாசி ரோடு, அண்ணாசிலை அருகே, மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இதில், 'திருக்குறள் 108', 'உள் ஒளி பிரபஞ்சத் தியானம்' ஆகிய நுால்கள் வெளியிடப்படுகிறது. வள்ளிகும்மி அரங்கேற்றம்
காரனுார், வாராஹி அம்மன் வள்ளி கும்மி கலைக்குழுவின் மாபெரும் அரங்கேற்ற விழா நடக்கிறது. காரனுார், ஆதிசக்தி மகா வாராஹி அம்மன் கோவில் அருகில், மாலை, 6:00 முதல் 9:00 மணி வரை நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
28-Dec-2024