மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
கோவையில் திருவையாறு
நரேஷ் தொண்டு அறக்கட்டளை மற்றும் வாய்ஸ் ஆப் சேன்ஞ் சார்பில் கோவையில் திருவையாறு நிகழ்ச்சி நடக்கிறது. வடவள்ளி, சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. 18 நிகழ்ச்சிகளில், 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெறவுள்ளனர். மாலை, 5:30 மணிக்கு கலைஞர்களுக்கு நவரத்னா விருது வழங்கும் விழா நடக்கிறது. தைப்பூசத்திருவிழா
மருதமலை, சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா நடந்து வருகிறது. காலை, 7:00 மணி முதல் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை, சிம்மாசனத்தில் திருவீதி உலா நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் யாகசாலை பூஜைகளும், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. சங்கர விஜயம்
ராம்நகர், கோதண்டராமர் கோவிலில், விஷேச பூஜைகள், ஹோமங்கள், சொற்பொழிவு மற்றும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இன்று, 'சங்கரவிஜயம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு, மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. தேர்த்திருவிழா
சரவணம்பட்டி, கவுமார மடாலயம் தண்டபாணிக் கடவுள் கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழா நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் மூலவர் திருமஞ்சனம், காலை, 11:00 மணி முதல், காப்புக்கட்டுதல், கொடியேற்றுதல் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, தெருவடைச்சான் மகாரதம் திருவீதி உலா நடக்கிறது. பகவத்கீதை சொற்பொழிவு
எண்ணங்களால் உங்களை உருவாக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை, மனமே வலிமையானது என்கிறது. டாடாபாத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசனில், பகவத்கீதை சொற்பொழிவு மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அருளானந்தர் ஆலய திருவிழா
ஆர்.எஸ்.புரம், புனித அருளானந்தர் ஆலயத்தில் தேர்த்திருவிழா நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி, புதுநன்மை மற்றும் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்குதலும், காலை, 10:30 மணிக்கு, ஹோலிமாஸ் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு தேர்த்திருவிழா திருப்பலி மற்றும் ஆடம்பர தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை நடக்கிறது. கம்பன் விழா
கோவை கம்பன் கழகத்தின், 53ம் ஆண்டு கம்பன் விழா, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப்பள்ளியின் நானி கலையரங்கத்தில், கலை, 9:45 மணி முதல் நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில், சுழலும் சொல்லரங்கம், சிந்தனை அரங்கம் மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடக்கிறது. ஆன்மிக ஐயம் அறிதல்
மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில் சத்சங்கம் நடந்து வருகிறது. இன்று, மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை, சுவாமி சங்கரானந்தா 'அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். விருது வழங்கும் விழா
விஜயா வாசகர் வட்டம் மற்றும் காரமடை சவீதா மருத்துவமனை இணைந்து, அ.முத்துலிங்கம் விருது வழங்கும் விழாவை நடத்துகின்றன. பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் டி அரங்கில் மாலை, 5:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. திருக்குறள் முப்பெரும் விழா
உலகத் தமிழ் நெறிக்கழகம் மற்றும் திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் முப்பெரும் விழா நடக்கிறது. பூமார்க்கெட், சித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில், காலை, 9:30 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்குகிறது. திருக்குறள் சார்ந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. துவக்க விழா
கோவைபுதுாரில், விஸ்வன்கர் மழலையர் பள்ளி துவக்க விழா காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. கருத்தரங்கு
பிச்சனுார், ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு குறித்து கருத்தரங்கு, மதியம், 2:00 மணிக்கு நடக்கிறது. வள்ளி கும்மியாட்டம்
மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, குருந்தமலை, குழந்தைவேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூசத் திருத்தேர் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, ஜெயகிருஷ்ணா கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம், மாலை, 5:00 முதல் 9:00 மணி வரை நடக்கிறது. அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.