உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆண்டு பெருந்திருவிழா

ஒத்தக்கால்மண்டபம், புற்றிடங்கொண்டீசர் பூங்கோதையம்மன் கோவிலில், 16ம் ஆண்டு பெருந்திருவிழா நடக்கிறது. நாகவாகனத்தில் சோமாசுக்கந்தர், சந்திரவட்டத்தில் அம்மை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, மாலை, 6:30 மணி முதல் நடக்கிறது.

குண்டம் திருவிழா

என்பதாவது வட்டம், நாடார் வீதியில், முனியப்பன் பத்ரகாளியம்மன் கோவிலில், 426ம் ஆண்டு குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று, மதியம், 12:00 மணிக்கு அம்மன் பெரிய அபிஷேகம் நடக்கிறது.

உத்தவ் கீதை

பாரதீய வித்யா பவன் சார்பில், ஆனைக்கட்டி, ஆர்ஷ வித்யாகுருகுலத்தின் பூஜ்யஸ்ரீ சுவாமி பரமார்த்தானந்தரின் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில், 'அபரோக்சானுபூதி' என்ற தலைப்பில் காலை, 6:30 மணி முதலும், 'உத்தவ - பாகம் 8' என்ற தலைப்பில் மாலை, 6:30 மணி முதலும் சொற்பொழிவு நடக்கிறது.

அபிஷேக விழா

கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், 643வது மாதாந்திர அபிஷேக விழா நடக்கிறது. பேரூர், பட்டீஸ்வரர் கோவிலில், பாலதண்டாயுதபாணி சன்னதியில், காலை, 9:30 மணி முதல் நடக்கிறது.

மாணவர்களுக்கு வழிகாட்டி

ஒன்பது, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, ஒசூர் ரோடு, ஆருத்ரா ஹாலில், மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை நடக்கிறது. சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கலந்துகொள்கிறார்.

உற்சவ திருவிழா

சூலுார், சிந்தாமணிப்புதுார், சக்தி மாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ திருவிழா நடக்கிறது. விழாவில், இன்று இரவு, 7:00 மணிக்கு, விசேஷ பூஜை மற்றும் ஆராதனை நடக்கிறது.

சித்திரைத்திருவிழா

மதுக்கரை ரோடு, காமராஜ் நகர், சக்தி விநாயகர், சித்தி விநாயகர், ஜெயமாரியம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு சித்திரைத் திருவிழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை தொடர்ந்து கம்பம் சுற்றி விளையாடுதல், இரவு, 9:00 மணிக்கு, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

தேசிய சிலம்ப சாம்பியன்ஷிப்

மாயோன்வீர கலைக்கூடம் சார்பில், மூன்றாவது தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. கவுண்டம்பாளையம், கே.வி.எம்., மஹாலில், மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.

அமைதியின் அனுபவம்

தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

சமஸ்கிருத வகுப்புகள்

ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ சார்பில், சமஸ்கிருத வகுப்புகள் நடக்கின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகம் கற்பித்து தரப்படுகிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. * குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி