உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

அன்னதானப் பெருவிழா நாதேகவுண்டன்புதுார் நரசிம்ம பெருமாள் கோவிலில், 21ம் ஆண்டு அன்னதானப் பெருவிழா நடக்கிறது. காலை 8 மணிக்கு பால்குட நீராட்டு, அபிஷேகப் பூஜை நடைபெறும். தொடர்ந்து, காலை 11 மணி முதல் அன்னதானப் பெருவிழா நடக்கிறது. பெருமாள் கருட சேவை வெள்ளலுார் பூமிநீளா நாயகி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில், சிறப்பு விழா நடக்கிறது. மூன்றாம் சனிக்கிழமையான இன்று, மாலை 6 மணிக்கு பெருமாள் கருட சேவை நடைபெறுகிறது. சத்ய சாயி கோடி அர்ச்சனை சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை, ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் ரோட்டில் நடக்கிறது. காலை 7, 9.30 மற்றும் மாலை 4.30 மணிக்கு பாராயணம், மாலை 5.30க்கு சாய்பஜன் சத்சங்கம் நடக்கிறது. சூரிய மின்னாற்றல் விழிப்புணர்வு அனைத்து மின் நுகர்வோர்களுக்கான, சூரிய மின் சக்தி திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. அரசூர் தங்கநாயகி அம்மன் கோவில் வசந்த மஹாலில், காலை 11 முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார் ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ