மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ஆன்மிக சொற்பொழிவு
மேட்டுப்பாளையம் ரோடு, ஸ்ரீ நாக சாய் மந்திரில், ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 5:30 மணி முதல், சாய் பஜன் நடக்கிறது. மாலை, 6:00 மணி முதல், சீரடி சாய் அனுகிரஹ உபதேசம் மற்றும் பிரார்த்தனையின் மகத்துவம் குறித்த சொற்பொழிவு நடக்கிறது. மீண்டும் பள்ளியில்
கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2007 முதல் 2008 வரை படித்த, பத்தாம் வகுப்பு முன்னாள் மாணவிகள், மீண்டும் சந்திக்கின்றனர். ராஜவீதியிலுள்ள பள்ளி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கட்டுமான திருவிழா
கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் இண்டஸ்ட்ரி இணைந்து, சர்வதேச கட்டுமான விழாவை நடத்துகிறது. அவிநாசி ரோடு, கொடிசியா 'ஏ' ஹாலில் காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது. அனுமதி இலவசம். கல்வியாளர்கள் கருத்தரங்கு
சென்னை, எஸ்.பி.ஐ.ஒ.ஏ., கல்வி அறக்கட்டளை சார்பில், கல்வியாளர்கள் கருத்தரங்கு இன்று துவங்குகிறது. பொன்னையராஜபுரம், எஸ்.பி.ஒ.ஏ., மெட்ரிக் பள்ளியில் மதியம், 2:00 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில், பல்துறை வல்லுனர்கள் சிறப்புரையாற்றுகின்றனர். தொழில்நுட்ப கருத்தரங்கு
ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழல்நுட்பக் கல்லுாரியில், 'சோனார்' தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு நடக்கிறது. டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி சதிஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சந்திப்பு, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள் டீன் மகேஷ் பஞ்சகனுலா பங்கேற்கிறார். பரிசளிப்பு விழா
கோவை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா, இன்று நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு விழா துவங்குகிறது. ஐ.டி., கருத்தரங்கு
பேரூர், பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் கருத்தரங்கு, மதியம், 2:30 மணிக்கு நடக்கிறது. 'தகவல் தொழில்நுட்ப பணி கலாசாரத்தின் சவால்கள்' என்ற தலைப்பில், பொறியாளர் அருண்பிரசாத் பேசுகிறார். இலவச தடுப்பூசி முகாம்
உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, டவுன்ஹால், அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது. காலை, 9:00 முதல் நாய், பூனைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. திறப்பு விழா
மாதம்பட்டி, காரமடை ரோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பின்புறம், லிட்டில் லீப்ஸ் மாண்டச்சேரி மழலையர் பள்ளியின் திறப்பு விழா, இன்று நடக்கிறது. பார்க் கல்வி குழும சி.இ.ஓ., அனுஷா திறந்து வைக்கிறார்.