மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
சதய விழா
பேரூர், திருவாவடுதுறை ஆதினக் கிளை மடம் சார்பில், ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. இதில், ஜெயங்கொண்ட சோழன் செப்புத் திருமேனிக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. சிறப்பு சொற்பொழிவு மற்றும் திருமுறை விண்ணப்பம் மற்றும் அருளாரமுதம் வழங்குதல் நடக்கிறது. ஆன்மிக இசை
தசரா பாடல்கள் என்ற தலைப்பில் கர்நாடிக் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடக்கிறது. கோவைப்புதுார், கிளப் ரோடு, ஸ்ரீ சங்கரா கிருபா மையத்தில் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், கலைஞர்கள் சுருதி, ஸ்ரீலட்சுமி மற்றும் வம்சிதாரா ஆனந்த் ஆகியோர் பங்கேற்று இசை நிகழ்த்துகின்றனர். திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'துன்பம் மேலாண்மை' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம். பனை விதைகள் நடும் விழா
ஆணிவேர் அமைப்பு மற்றும் சின்னத்தடாகம் ஊராட்சி இணைந்து, பனை விதைகள் நடும் விழாவை நடத்துகின்றன. சின்னத்தடாகம், பொன்னேரி குட்டையில் காலை, 9:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. இதில், ஆயிரம் பனை விதைகள் நடப்படுகின்றன. நம்ம ஊரு சந்தை
பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்களை விற்பனை செய்யும், 'நம்ம ஊரு சந்தை' இன்று நடக்கிறது. காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, மாநகராட்சி பள்ளியில் காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை சந்தை நடக்கிறது. பேரூர் படித்துறையில் களப்பணி
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பேரூர் படித்துறையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, சுத்தம் செய்யும் களப்பணி இன்று நடக்கிறது. பேரூர் படித்துறையில், காலை, 7:00 முதல் 9:30 மணி வரை களப்பணி நடக்கும். ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பணியாளர்களுக்கு பாராட்டு
ராம்நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், சிறந்த தொண்டாற்றும் கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. மழை மற்றும் தீபாவளி சமயங்களில் கடுமையாக உழைத்தவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். ராம்நகர், அசோக பிரேமா திருமண மண்டபத்தில், காலை, 8:00 மணிக்கு நிழ்ச்சி துவங்குகிறது. அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் வாயிலாக, மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம்
'ஆல்கஹாலிக் அனானிமஸ்' சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.