உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளியில் கழிவறை சுத்தம் செய்யும் இயந்திரம்

அரசு பள்ளியில் கழிவறை சுத்தம் செய்யும் இயந்திரம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் அரசு பள்ளிக்கு தன்னார்வலர் சார்பில், கழிவறை சுத்தம் செய்யும் இயந்திரம் அர்ப்பணிக்கப்பட்டது.கிணத்துக்கடவுக்கு உட்பட்ட, சொக்கனூர் ஊராட்சி முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, உத்திரகுமார் என்ற தன்னார்வலர், 12 ஆயிரம் மதிப்பிலான கழிவறை சுத்தம் செய்யும் இயந்திரத்தை வழங்கினார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கலாவதி, பி.டி.ஏ., மற்றும் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை