மேலும் செய்திகள்
காய்கறி வரத்து சரிவு: ஏலத்தில் விலை உயர்வு
02-Nov-2026
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், இன்று (நவ.,24) பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளது. கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி (15 கிலோ) –- 600, தேங்காய் (ஒன்று) -–- 30, கத்திரிக்காய் கிலோ – 60, முள்ளங்கி -–- 29, முருங்கைக்காய் -–- 40, வெண்டைக்காய் -–- 45, பூசணிக்காய் -–- 15, அரசாணிக்காய் -–- 15, பாகற்காய் -–- 60, புடலை -–- 27, சுரைக்காய் -–- 20, பீர்க்கங்காய் -–- 60, வெள்ளரிக்காய் -–– 25, அவரைக்காய் -–- 75, பீட்ரூட் -–- 25 மற்றும் பச்சை மிளகாய் -–- 60 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், இன்று கத்தரிக்காய் கிலோ – - 7, முள்ளங்கி -–- 7, முருங்கைக்காய் -–- 20, வெண்டைக்காய் -–- 25, பாகற்காய் -–- 5, புடலை -–- 3, சுரைக்காய் -–- 10, வெள்ளரிக்காய் -–- 5 மற்றும் பீட்ரூட் -– 15 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதே போன்று, தக்காளி (15 கிலோ) -–- 200 மற்றும் பச்சை மிளகாய் கிலோ –- 25 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், ‘பெருமாபாலன் காய்கறிகளின் வரத்து, குறைவாக இருந்தது. விற்பனை விலையும் குறைந்து காணப்பட்டது. வரும் நாட்களில் வரத்து, விலையில் மாற்றம் ஏற்படும்,’ என்றனர்.
02-Nov-2026