கோடை மழையால் சுற்றுலா பயணியர் குஷி
வால்பாறை; வால்பாறையில் பரவலாக பெய்யும் கோடை மழையால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்தது. இதனால் பி.ஏ.பி., பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது.இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக இடையிடையே கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. வெயில் கொளுத்திய நிலையில், கோடை மழை பரவலாக பெய்வதால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதனிடையே, நீண்ட இடைவெளிக்கு பின் வால்பாறையில் மழை தொடர்வதால் பி.ஏ.பி., பாசன விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):வால்பாறை - 17, சோலையாறு - 10, பரம்பிக்குளம் - 4 மேல்நீராறு - 7, கீழ்நீராறு - 6, ஆழியாறு - 14, மேல்ஆழியாறு - 8, மணக்கடவு - 3, துணக்கடவு - 2, நவமலை - 8 என்ற அளவில் மழை பெய்தது.