மேலும் செய்திகள்
மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
05-Sep-2026
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில் ரோட்டின் குறுக்கே விழுந்த மரத்தை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி தரை மட்ட பாலம் அருகே தனியார் பள்ளிகள் உள்ளன. குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளதால் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. இந்நிலையில் நேற்று தனியார் பள்ளி அருகே, மே பிளவர் மரம் திடீரென ரோட்டின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, செயல் அலுவலர் மங்களேஸ்வரன், சம்பவ இடத்துக்கு சென்று, மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்தனர். பேரூராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றிய பின், போக்குவரத்து சீரானது.
05-Sep-2026