உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளானைப்பட்டியில் நாளை பாரம்பரிய விளையாட்டு திருவிழா

வெள்ளானைப்பட்டியில் நாளை பாரம்பரிய விளையாட்டு திருவிழா

கோவில்பாளையம்; பாரம்பரிய விளையாட்டு திருவிழாவில் பங்கேற்க, மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வெள்ளானைப்பட்டி, மாரியம்மன் கோவில் திடலில், வருகிற 16ம் தேதி காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, பாரம்பரிய கலைத் திருவிழா, புத்தக வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடக்கிறது.நவீன யுகத்தில், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் மறந்து போன பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இதில் நடத்தப்படுகின்றன.சடுகுடு, திரிவீசுதல், கண்ணாமூச்சி, நான்கு சக்கர நொண்டி, கல் பீச்சான், கோழி குண்டு, பம்பரம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.இதையடுத்து கவியரங்கம் நடக்கிறது. புத்தகம் வெளியிடப்படுகிறது. விருதுகள் வழங்கப்படுகிறது.விழாவில் பங்கேற்க வெள்ளானைப்பட்டி கலை விரும்பிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ