மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம் - -ஊட்டி சாலையில், பர்லியார் வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கல்லார் அருகே ஊட்டி சாலையில் முதல் பெண்டில், பழமையான மரம் ஒன்று சாலையில் நேற்று விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக மரத்தை நவீன கருவிகள் வாயிலாக வெட்டி அகற்றினர். இதனால் போக்குவரத்து சீரானது.