உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘எஸ் பெண்ட்’ சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்

‘எஸ் பெண்ட்’ சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்

கோவை: தண்ணீர்பந்தல் சாலையில் உள்ள எஸ் -பெண்ட் பகுதியில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இப்பகுதியில் இன்று முதல் செப்.,7ம் தேதி வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் வேலை நடக்கவுள்ளது. இதனால் இந்நாட்களில்  தண்ணீர் பந்தல் எஸ்– பெண்ட் சந்திப்பில் இருந்து கொடிசியா செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.  கொடிசியா வணிக வளாகம் நோக்கி செல்லும் வாகனங்கள், தண்ணீர்பந்தல் 9வது வீதி  வழியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியைக் கடந்து, கொடிசியா சாலையை அடைந்து, அங்கிருந்து அவிநாசி சாலை வழியாகச் செல்லலாம். கொடிசியா சாலை வழியாக அவிநாசி சாலைக்கு செல்லும் கனரக வாகனங்கள் காந்திமாநகர், பயனீர்மில் சாலை வழியாகவும், சரவணம்பட்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் விளாங்குறிச்சி சாலை, காளப்பட்டி நான்கு சாலை வழியாகவும் செல்லலாம் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை