உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவை; கோவை இஸ்கான் கோவில் தேர் திருவிழா நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.* பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜ வீதி, வழியாக வாகனங்கள் வர முடியாது. அதற்கு பதில், பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில் வலப்புறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக இடப்புறம் திரும்பி பேரூர் வழிச்சாலையில் செல்லலாம்.* மருதமலை தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி, வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. அதற்கு பதில், மருதமலை தடாகம் ரோட்டில் இருந்து காந்திபார்க், பொன்னையாராஜபுரம், சொக்கம்புதுார், ராமமூர்த்தி ரோடு, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்லலாம்.* பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர் வழியாக வரும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியில் செல்லாமல் உக்கடம் நான்கு வழி சந்திப்பை அடைத்து சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் ரவுண்டானா வழியாக செல்லலாம்.* உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக தடாகம் ரோடு, மருதமலை மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் ஐந்து முக்கு சந்திப்பில் இருந்து இடப்புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கபுதுார், பொன்னையாராஜபுரம், காந்திபார்க் வழியாக செல்லலாம்.* சுக்கிரவார்பேட்டை ரோட்டில் இருந்து தியாகி குமரன் வீதி வழியாக, ராஜவீதிக்கு, வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. கனரக, சரக்கு வாகனங்கள் நாளை, காலை, 8:00 முதல், இரவு 2:00 மணி வரை நகருக்குள் வர தடை விதிக்கப்படுகிறது. தேர் திருவிழா நடக்கும் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி., வீதி, ஆகிய ரோடுகளில் நாளை காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை எந்த வாகனத்துக்கும் அனுமதியில்லை.தேர் திருவிழாவுக்கு பைக்கில் வரும் வரும் பக்தர்கள், ராஜ வீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்தலாம். பெரிய கடைவீதி கோனியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் உள்ள வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ