ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு கோவையில் பயிற்சி முகாம்
கோவை; அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கான 'கற்றலின் வெளிப்பாடு' என்ற தலைப்பில், பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்று வருகிறது.கோவை அரசு துணி வணிகர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில், 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். 1 முதல் 3ம் வகுப்பு மற்றும் 4 முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்காக, இரண்டு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், பாடங்களை எவ்வாறு கற்பிக்கலாம், அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்வது எப்படி, என்பன குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் திறன் நிலைகளுக்கேற்ப, பாடங்களை அமைத்து கற்றுத்தரும் நுட்பங்களும், நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 'மாணவர்களின் கற்றல் நிலையை அதிகரிக்க, பாடங்களை தரமான முறையில் கற்பிப்பது மிகவும் முக்கியம். அதற்கான பயிற்சியாகவே இந்த முகாம் நடைபெற்று வருகிறது' என்றார்.