கட்டட தொழிலாளர்களுக்கு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் பயிற்சி
கோவை: தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில், சங்க முன்னணி ஊழியர்களுக்கு அரசியல் மற்றும் சங்க பணிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம், இ.கம்யூ. மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில செயலாளர் துரைசாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். முகாமில், 'போராட்டங்களும் தியாகங்களும்' என்னும் நுாலை, இ.கம்யூ. மாவட்ட செயலாளர் சிவசாமி வெளியிட, மாநில செயலாளர் நந்தினி, மாவட்ட தலைவர் நாராயணன், மாவட்ட செயலாளர் செல்வம், மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், சம்பத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த நுாலில், தமிழகத்தில் குறிப்பாக, கோவையில் தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டங்களும், தொழிலாளர்கள் செய்த தியாகங்களும் இடம்பெற்றுள்ளன.