மேலும் செய்திகள்
வாகன விபத்தில் ஒருவர் காயம்
10-Nov-2026
கிணத்துக்கடவு: வடசித்தூர் வட்டார விவசாயிகளுக்கு, கிணத்துக்கடவு வேளாண்துறை ‘அட்மா’ திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சியில் வேளாண் துறை சார்பில், வேளாண் விரிவாக்க இயக்கம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் வாயிலாக உள் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நானோ உரங்கள் மற்றும் மண்வள மேலாண்மையின் பங்கு குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டது. இதில், 30கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு வேளாண் அலுவலர் குருசாமி, வேளாண் கிடங்கில் இருப்பில் உள்ள விதைகள் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து பேசினார். வேளாண் துணை இயக்குனர் (ஓய்வு) மோகன்ராஜ் சாமுவேல், தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கிணத்துக்கடவு வட்டார தொழில்நுட்ப மேலாளர் மேகலாதேவி மற்றும் உதவி வேளாண் அலுவலர் தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
10-Nov-2026