உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி

பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி

பெ.நா.பாளையம்; கல்வித்தரத்தை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அனைத்து அரசு பள்ளிகளிலும், 24 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், உறுப்பினர்களாக உள்ளவர்களின் அதிகாரங்கள், பணிகள், கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பயிற்சி முகாம் நடந்தது.முகாமை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேணுகா துவக்கி வைத்தார்.பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரிய பயிற்றுனர் ராஜேஸ்வரி விளக்கினார். மாநில கருத்தாளர்களாக செல்வ பிரனாமிகா, மாறன், பூங்கொடி ஆகியோர் பங்கேற்று, பல்வேறு செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து, உறுப்பினர்களுக்கு விளங்கினர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, 6 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், குழு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுனர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி