உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குழந்தைகள், வளரிளம் பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி

 குழந்தைகள், வளரிளம் பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, 'கேர் டி' அமைப்பு சார்பில், ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி பட்டறை, லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. பயிற்சியாளராக வக்கீல் முகம்மது முர்சலீன், போக்சோ சட்டம், பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் குறித்து விளக்கினார். தையல் ஆசிரியர் சத்தியபாமா வரவேற்றார். மண்டல பயிற்சியாளர் சரவணபவன், பயிற்சி நோக்கம் குறித்து விளக்கினார். மண்டல டெக்ஸ்டைல்ஸ் பயிற்சியாளர் பிரீஜா, பயிற்சி குறித்து விளக்கினார். சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் காமாட்சி, சமூக நலத்துறை பணிகள், திட்டங்கள் குறித்து விளக்கினார்.அரசு ஆரம்ப சுகாதார பணியாளர்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம், மாவட்ட மனநல உளவியாளர் சிவா, செயல்பாட்டுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ