மேலும் செய்திகள்
தண்டவாளப் பராமரிப்பு; ரயில் இயக்கத்தில் மாற்றம்
28-Jul-2025
கோவை; மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்ட பல பகுதிகளில் ரயில்வே தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன.இதையடுத்து, எர்ணாகுளம் - டாட்டா நகர்(18190) எக்ஸ்பிரஸ், வரும், 28, செப்., 2 ம் தேதி போத்தனுார், கோவை, இருகூர் மார்க்கமாக இயக்கப்படும்.ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் வரும், 28, செப்., 2ம் தேதி போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். கோவை ரயில்வே ஸ்டேஷன் வராது. எர்ணாகுளம் - பெங்களூரு (12678) இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 28, செப்., 2 ம் தேதி போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். கோவை ரயில்வே ஸ்டேஷன் வராது.
28-Jul-2025