உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்கள் ரத்து, இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் ரத்து, இயக்கத்தில் மாற்றம்

கோவை; வடகோவை ரயில்வே யார்டில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், நாளை மறுதினம் (12ம் தேதி) ரயில்கள் ரத்து, இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போத்தனுார் - மேட்டுப்பாளையம்(66612) மற்றும் மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66615) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஆலப்புழா - தன்பாத்(13352), எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்.பெங்களூரு(12678) ஆகிய ரயில்கள் போத்தனுார் - இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில்வே ஸ்டேஷன் வராது. ஆலப்புழா - தன்பாத்(13352) ரயில் போத்தனுாருக்கு மதியம் 12.17 மணிக்கு வரும். எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்.பெங்களூரு(12678) ரயில், போத்தனுாருக்கு மதியம் 12.47 மணிக்கு வந்து செல்லும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை