உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி அதிகாரிகள் நகராட்சிகளுக்கு மாற்றம்

மாநகராட்சி அதிகாரிகள் நகராட்சிகளுக்கு மாற்றம்

கோவை; கோவை மாநகராட்சி அதிகாரிகள் இருவர், நகராட்சிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள பணியிடங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அதனால், மாநகராட்சிகளில் பணிபுரியும் அதிகாரிகள் நகராட்சி பணிகளுக்கும், நகராட்சிகளில் பணிபுரிவோர் மாநகராட்சிக்கும் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன்படி, 16 இன்ஜினியர்களுக்கு இட மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது.கோவை, ஈரோடு, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகராட்சிகளை சேர்ந்த இன்ஜினியர்கள், பல்வேறு நகராட்சிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், பெரியகுளம், திருவள்ளூர் நகராட்சிகளை சேர்ந்த இன்ஜினியர்கள் மாநகராட்சி பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், கோவை மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாலசந்தர், அவிநாசி நகராட்சிக்கு 'டெபுடேசன்' அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளார். உதவி பொறியாளர் தியாகராஜன், திண்டுக்கல் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டிருந்தார். இப்போது, கூடலுார் நகராட்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ