மேலும் செய்திகள்
துணை தாசில்தார் டிரான்ஸ்பர்
17-Oct-2025
- நிருபர் குழு - கோவை மாவட்டத்தில் எட்டு தாசில்தார்களும், 13 துணை தாசில்தார்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி தாசில்தார் வாசுதேவன், பொள்ளாச்சி சமூக பாதுகாப்பு திட்டத்துக்கும், கோவை விமானநிலையவிரிவாக்கப்பணி தாசில்தார் ஜெயக்குமார் பொள்ளாச்சிக்கும், சூலுார் தாசில்தார் சரண்யா கோவை விமான நிலைய விரிவாகத்துக்கும், கோவை வடக்கு வழங்கல் தாசில்தார் செந்தில்குமார் சூலுாருக்கும்மாற்றப்பட்டுள்ளனர். சூலுார் சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ஆனைமலைக்கும், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பணிக்கும்,பொள்ளாச்சி சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் குமரியானந்தன் கிணத்துக்கடவுக்கும், ஆனைமலை தாசில்தார் ராஜேந்திரன் சூலுார் சமூக பாதுகாப்பு திட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சூலுார் தலைமையிடத்து துணை தாசில்தார் சுமதி கோவை மாநகராட்சி தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணிபுரிந்த சத்தியஷீலா சூலுார் வழங்கல் அலுவலராகவும், கலெக்டர் அலுவலக 'இ' பிரிவு தலைமை உதவியாளராக இருந்த நாட்ராயன், சூலுார் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அவருக்கு பதிலாக பொள்ளாச்சி தெற்கு மண்டல துணை தாசில்தார் சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சூலுர் வட்ட வழங்கல் அலுவலர் ஹேமாவதி, கலெக்டர் அலுவலக 'ஊ' பிரிவு தலைமை உதவியாளராகவும், அப்பணியில் இருந்த சையது இலியாஸ், மதுக்கரைதேர்தல் பிரிவு தாசில்தாராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் அம்பிகா, சூலுார் மண்டல துணை தாசில்தாராகவும், அவருக்கு பதிலாக சூலுார் மண்டல துணை தாசில்தார் கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். சூலுார் தாலுகா தனித்துணை தாசில்தார் முத்துமாணிக்கம், மதுக்கரை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், பறக்கும்படை தனித்துணை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் கோவை தெற்கு தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும்,மாவட்ட வருவாய்த்துறையில் துணை தாசில்தாராக இருந்த அம்சவேணி, பறக்கும் படை தனித்துணை தாசில்தாராகவும், மாவட்ட வருவாய்த்துறையில் துணை தாசில்தாராக இருந்த செந்தில்குமார், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலராகவும், கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் செல்லதுரை, பொள்ளாச்சி தெற்கு மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
உடுமலை: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், துணை தாசில்தார் பொறுப்பு வகித்து வந்தவர்களில், 16 பேரை, மாவட்டத்தின் வெவ்வேறு அலுவலகம் மற்றும் பிரிவுகளுக்கு, பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் மனீஷ் நாரணவரே உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம், வழங்கல் துறை, நிலம் எடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை வருவாய் ஆய்வாளர், உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்து, 30 பேர் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
17-Oct-2025