உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருட்டு பைக்கில் பயணம்; போலீசார் வந்ததும் மாயம்

திருட்டு பைக்கில் பயணம்; போலீசார் வந்ததும் மாயம்

கோவை; சிங்காநல்லுார் கள்ளிமடையை சேர்ந்தவர் பிலிப்ஸ் மேத்யூ; தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது பைக்கில் நேற்று முன்தினம் இரவு, சுங்கம் பகுதியில் சென்றார். வழிமறித்த ஒருவர், அவரை தாக்கி விட்டு பைக்கை பறித்து தப்பினார். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பிலிப்ஸ் மேத்யூ, பைக்கை திருடிய நபர், சுங்கம் பகுதியில் சுற்றி வருவதாக தெரிவித்தார். ரோந்து போலீசார், சுங்கம் பைபாஸில் வாகனங்களை தணிக்கை செய்யத் துவங்கினர். பைக்கை திருடிய நபர், போலீசார் சோதனை செய்வது தெரியாமல் மீண்டும் அதே பகுதிக்கு, பைக்கை ஓட்டி வந்தார். வாகனத் தணிக்கை நடப்பதை பார்த்த அந்நபர், சிறிது துாரத்துக்கு முன்பே பைக்கை போட்டு விட்டு தப்பினார். ராமநாதபுரம் போலீசார் பைக்கை கைப்பற்றி விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், பைக்கை திருடியது முன்னாள் குற்றவாளி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை