உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாதநோய் தீவிரம் குறைக்க கே.எம்.சி.ஹெச்.,ல் சிகிச்சை

வாதநோய் தீவிரம் குறைக்க கே.எம்.சி.ஹெச்.,ல் சிகிச்சை

'வா த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், மக்கள் மூட்டு பிரச்னையை சாதாரணமாக விட்டு விடுகின்றனர். இது பிற்காலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.ஹெச்.,) வாத நோய் துறை நிபுணர் டாக்டர் சிவகுமார். அவர் கூறியதாவது: நம் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் நமது உடலுக்கே எதிராக செயல்படும்போது ஏற்படும் பாதிப்பு தன்னெதிர்ப்பு நோய்கள் என்கிறோம். இதில் பல வகைகள் இருந்தாலும், பொதுவாக அறியப்படுவது, சரவாங்கி மூட்டு வாதம் அல்லது முடக்குவாதம் ஆகும். முதுகு தண்டு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முதுகு, கழுத்து, மூட்டு பகுதிகளில் வலி ஏற்படும். கை, கால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஆகியவை இதன் அறிகுறிகள். காலையில் எழுந்ததும் கை, கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. இது 10 முதல் 15 நிமிடங்கள் வரை இருப்பது இயல்பு. சிலருக்கு ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலும் நீடிக்கும். மக்களுக்கு வாத நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், மூட்டு பிரச்னையை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். பிற்காலத்தில், எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, கை கால்கள் வளைந்து போக காரணமாக மாறிவிடும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெறுவது அவசியம். முடக்கு வாதம் மூட்டுகளை பாதித்து சிதைவுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, கண்ணில் உபாதைகளையும் ஏற்படுத்தும். இதனால், கண்களில் வறட்சி, கண் சிவத்தல், வலி ஏற்படும். மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறி இருக்கும். நாள்பட்ட முடக்குவாதம் இருப்பவர்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். மரபணு, சுற்றுச்சூழல், தொற்று போன்றவையும் முடக்கு வாதத்துக்கு காரணமாகின்றன. சில நோயாளிகளுக்கு மருந்தால் சரியாகாத போதும், அது ஒத்துக்கொள்ளாத போதும் வேறு சில நவீன மருந்துகளை மாற்றம் செய்து வழங்குவதன் வாயிலாக நோயின் தாக்கத்தை குறைக்கலாம். இதற்கான சிகிச்சை கே.எம்.சி.ஹெச்.,ல் அளிக்கப்படுகிறது; அனைத்து வசதிகளும் உள்ளன. விவரங்களுக்கு, 74188 87411 இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை