மேலும் செய்திகள்
போலீஸ் சோதனையில் 1,560 லாட்டரி பறிமுதல்
6 hour(s) ago
உதய தின விழா கொடியேற்றம்
6 hour(s) ago
சூலுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
6 hour(s) ago
கோவை: உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) விழிப்புணர்வு நிகழ்ச்சி, மரக்கன்று வழங்கும் இயக்கம் நடந்தது.கல்லுாரியின் முதுகலை, ஆராய்ச்சித் தாவரவியல் துறை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ‘பசுமைக் கரங்கள், பசுமையான எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி செயலர் வாசுகி நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம், பசுமையான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதல்வர் சங்கீதா, தாவரவியல் துறைத் தலைவர் தேன்மொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago