மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் பணி
27-May-2025
கோவில்பாளையம்; அக்ரஹார சாமக்குளம் ஏரியில் 'தீவு பசுமை திட்டம்' துவக்கப்பட்டுள்ளது.கோவில்பாளையம் அருகே, 165 ஏக்கர் பரப்பளவில் அக்ரஹார சாமக்குளம் உள்ளது. இந்த குளத்தில் நான்கு ஆண்டுகளாக, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஏரியில் அதிக அளவில் நீர் தேங்கி நிற்பதால், நீரில் மூழ்கியுள்ள பகுதியில், மரங்கள் அழுகி வருகின்றன. இதை மாற்றும் வகையில், கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில், மையத்தில் உள்ள மண் தீவுகளில் மரக்கன்றுகளுக்கு மட்டும் தனித்து நீர் பாய்ச்சும் தீவு பசுமை திட்டத்தை துவக்கி உள்ளனர். துவக்கவிழாவில், பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் அம்சராஜ் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.இத்திட்டத்தில் நீர் நிறைந்த பகுதிகளில், அழுகி வரும் மரங்களை மீட்டெடுத்தல், மண் தீவுகளில், மரங்களை வளர்த்து, பசுமை பரப்புதல். பெட்ரோல் இன்ஜின் பம்ப் மூலம் ஏரியிலிருந்து நீரை எடுத்து மண் தீவுகளின் உச்சிக்கு கொண்டு சென்று மரங்களுக்கு பாய்ச்சுதல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன. துவக்க விழாவில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
27-May-2025