இந்துஸ்தான் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
கோவை : ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்டர்நேஷனல் அறக்கட்டளை சார்பில், அப்துல் கலாம் 94வது பிறந்த நாளை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா, நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.துணை மேயர் வெற்றிச்செல்வம் நிகழ்வை துவக்கிவைத்தார். தொடர்ந்து, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி, கலாம் பர்னிச்சர் உரிமையாளர் நித்தீஷ், அப்துல்கலாம் இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் மாவட்ட அமைப்பாளர் ஜெயேந்திர ராவணன் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்வில் மரம் நடுதல், பராமரிப்பு அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இயற்கை பாதுகாப்போம், அப்துல் கலாம் கனவு நினைவாகும் வகையில், செயல்படுவோம் என மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.