உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுாரில் மரங்கள்  வெட்டி சாய்ப்பு

சூலுாரில் மரங்கள்  வெட்டி சாய்ப்பு

சூலுார்; சூலுாரில் நிழல் தந்து கொண்டிருந்த ஐந்து மரங்களை வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சூலுார் கலங்கல் ரோட்டில் லயன்ஸ் கிளப் மண்டபம் உள்ளது. இதன் அருகே நிழல் தரும் மரங்கள் பல உள்ளன. இந்நிலையில், அந்த ரோட்டில் உள்ள புங்கன் உள்ளிட்ட ஐந்து பெரிய மரங்கள் நேற்று வெட்டப்பட்டன.இதனால், அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர்கள், மரம் வெட்டுவோரிடம் மரங்களை யார் வெட்ட அனுமதி அளித்தது என, கேள்வி எழுப்பினர். 12 வது வார்டு கவுன்சிலரின் கணவர் தான் வெட்ட சொன்னதாக கூறினர். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, பேரூராட்சி செயல் அலுவலர் கூறினார்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,பசுமையை மேம்படுத்தும் நோக்கில் சூலூரில் பல்வேறு அமைப்பினர், பசுமை ஆர்வலர்கள் மரங்களை வளர்த்து பாதுகாத்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சூலுாரின் மையப்பகுதியில் ஐந்து பெரிய மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.யாரிடமும் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !