உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிமென்ட் குடோனான சமுதாயக்கூடம் பழங்குடியின மக்கள் அதிருப்தி

சிமென்ட் குடோனான சமுதாயக்கூடம் பழங்குடியின மக்கள் அதிருப்தி

வால்பாறை, ; பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் சிமென்ட் குடோனாக மாற்றியதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.வால்பாறை அடுத்துள்ள, கேரள மாநிலம், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ளது பெரும்பாறை செட்டில்மென்ட். பழங்குடியின மக்களின் வசதிக்காக, அதிரப்பள்ளி ரோட்டில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதில், பழங்குடியின மக்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கிறது.இந்நிலையில், அதிரப்பள்ளி ரோடு பணிக்கான கட்டுமான பொருட்கள், சமுதாய நலக்கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பழங்குடியின மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பழங்குடியின மக்கள் கூறியதாவது:ரோடு பணிக்கான கட்டுமான பொருட்களை, சமுதாயநலக்கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியவில்லை. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த மைதானம் முழுவதிலும், ரோடு பணிக்காக இரும்பு கம்பி, மணல், ஜல்லி போன்றவை கொட்டப்பட்டுள்ளதால், சிரமத்திகுள்ளாகி வருகிறோம்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழங்குடியின மக்களின் பயன்பாட்டில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் உள்ள பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை