உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி

வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி

பெ.நா.பாளையம் : இந்திய - பாகிஸ்தான் எல்லையில் காஷ்மீரில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை அழித்து வீர மரணம் அடைந்த, ராணுவ வீரருக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.கடந்த, 1993ம் ஆண்டு காஷ்மீர் எல்லையில், நம் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூன்று பேரை கொன்று, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் நாயக் கண்ணாளன் கென்னடி நினைவிடம், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும், அவரது நினைவு நாளில் பொதுமக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெனட் ராணுவ பிரிவின் சுபேதார் மேஜர் முனிசந்திரன், சுபேதார்கள் கெப்புசாமி, சாந்தகுமார், சேசுதாஸ், சுனில் தேசாய் ஆகியோர் தலைமையிலான, 20 ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியிலும், அதை தொடர்ந்து வீர அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் திரளாக கலந்து கொண்டு, கென்னடிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை